கருங்கல், அக். 4: நட்டாலம் ஊராட்சியின் கிராமசபை கூட்டம் அரசு பள்ளியில் நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் விளவங்கோடு தாசில்தார், நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
மிடாலம் ஊராட்சி
மிடாலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பங்கேற்று கிராம சபையால் மக்கள் பெறும் பயன்களை எடுத்து கூறினார். கூட்டத்தில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயராணி, சுகாதார துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மின்சார வாரியம், ரேஷன் கடை ஊழியர்கள், அரசு செவிலியர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.