தர்மபுரி, நவ.10: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், தர்மபுரி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பசுவராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் திருஞானம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரங்கன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் சிவகுமார் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். மாநில தலைவர் திருமலைவாசன், மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில பொருளாளர் ராஜேஷ்கண்ணன், மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், சங்கத்தின் கோரிக்கைகள் குறித்தும் அரசின் நிலைப்பாடு குறித்தும், சென்னையில் உயரதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மாவட்ட பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
0