சேலம், அக்.5: அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு 6 மணி நேர வேலை வழங்கி பென்சன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். 180 நாட்கள் சேமிப்பு விடுப்பு, பணிக் கொடை ₹5 லட்சம், குரூப் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தமிழ்நாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிராம பகுதியில் தபால் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி சங்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஒன்றிய அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.