குடியாத்தம், ஆக.18: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, மோர்தானா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்ட மிட்டா, மோர்தனா, வி டி பாளையம், கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. இதனை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை பிளிறும் சத்தத்துடன் விவசாய நிலத்திற்குள் நுழைய முயற்சித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.