கிருஷ்ணகிரி, செப்.2: பர்கூர்-ஜெகதேவி சாலையில், கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குநர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காட்டுமேடு என்னுமிடத்தில் சென்ற போது, ஒரு லாரி கிரானைட் கற்களுடன் கேட்பாரின்றி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் சோதனை செய்த போது, கிரானைட் கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதன் மதிப்பு சுமார் ₹90 ஆயிரம் இருக்கும். இதையடுத்து, கிரானைட் கற்களுடன் லாரியை கைப்பற்றி, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.