நாகர்கோவில், ஆக.20: நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் காவல்துறையினருக்கு கிம்ஸ் மருத்துவமனை சார்பில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஏடிஎஸ்பி சுப்பையா, டிஎஸ்பி செந்தாமரைக்கண்ணன், ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் தலைமை வகித்தனர். டாக்டர் சாய் கோபால் நீரிழிவு நோய் மற்றும் வாழ்க்கை முறை குறித்து பேசினார்.
கிம்ஸ் மருத்துவமனை மேலாளர் முரளி தராவத் பேசுகையில், நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக கூறினார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து காவல்துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் கிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் நடந்தது. டாக்டர் மினி குரூப், டாக்டர் ரஜீஸ் செல்வகணேசன் ஆகியோர் ஆலோசனை அளித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டு பயனடைந்தனர்.