பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடி கவர மலை வனப்பகுதியில் ஏராளமான மான்கள், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. நேற்று வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று, வனப்பகுதியையொட்டி உள்ள பில்பருத்தியை சேர்ந்த விவசாயி ரகுராஜ் என்பவரின் விவசாய கிணற்றில் தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மானை மீட்டனர். ஆனால், அதற்குள் மான் உயிரிழந்து விட்டது. இதையடுத்து, மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண் பிரசாத் உத்தரவின்பேரில், பூதநத்தம் பிரிவு வனவர்(பொ) சுருதி உள்ளிட்ட வனக்காப்பாளர்கள், பொம்மிடி கால்நடை மருத்துவமனை மருத்துவர் ரவி உதவியுடன் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பினன்ர், பொம்மிடி வனப்பகுதியில் புதைத்தனர்.
கிணற்றில் விழுந்த புள்ளி மான் இறப்பு
0
previous post