வேப்பூர், ஆக. 29: வேப்பூர் அடுத்த மங்களூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் பாக்யராஜ் (30). இவர் நேற்று காலை தனது விவசாயக் கிணற்றில் உள்ள நீர் மோட்டார் பழுதானதால் தனது தகப்பனார் கோவிந்தசாமி, மாமனார் வெங்கடேசன் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்று சக்திவேல் கிணற்றில் உள்ள நீர் மோட்டாரை பழுதுபார்க்க கிணற்றின் உள்ளே இறங்கி தண்ணிரில் மூழ்கி மோட்டார் ஒயரை எடுக்க இரண்டு முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் ஒயரை எடுக்க முடியவில்லை. இதனால் மூன்றாவது முறையாக கிணற்றில் மூழ்கி ஒயரை எடுக்க முயன்று கிணற்றுக்குள் குதித்தவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் எழுந்து வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பாக்யராஜ் உடலை மீட்டனர். பின்னர் சிறுப்பாக்கம் போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
previous post