ரெட்டியார்சத்திரம், ஜூலை 4: ரெட்டியார்சத்திரம் அருகே கே.எல்லைப்பட்டியை சேர்ந்த சுப்பையா (75), 100 நாள் வேலைக்கு சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அப்பகுதி மக்கள் தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுப்பையாவை லேசான காயத்துடன் மீட்டனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர்.