கிணத்துக்கடவு,பிப்.10: கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக தக்காளியை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தக்காளி, பொறியல் தட்டை,வெண்டைக்காய்,பச்சை மிளகாய்,கத்தரிக்காய் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கிணத்துக்கடவில் செயல்பட்டு வரும் அன்னை இந்திரா தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து நேரடி ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
நேற்று கிணத்துக்கடவு மார்கெட்டிற்கு சுமார் 5 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. பின்னர் நடைபெற்ற ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி அதிகபட்சமாக ரூ.150 க்கும்,ஒரு கிலோ தக்காளி ரூ.10 க்கும் விற்பனையானது.தக்காளி விலை கடுமையாக சரிந்து வருவதால், தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.