சோமனூர்: கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையத்தில் தோட்டத்து சாலைகளுக்கு செல்லும் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் விஎம்சி சந்திரசேகரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சம் செலவில் தார்சாலை அமைக்க மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டு அந்த பணிக்கு நேற்று பூமி பூஜை போடப்பட்டது.
கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் விஎம்சி சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்பன் ரங்கசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியமூர்த்தி, ரோட்டரி செயலாளர் ஆறுமுகம், வார்டு உறுப்பினர்கள் நாகேஸ்வரன், பாலசுப்பிரமணியம், செல்லம்மாள், மற்றும் ஊர் பொதுமக்கள் கந்தசாமி, அகிலேஷ், புருஷோத்தமன், சென்னியப்பன், சுப்பிரமணியம், கனகராஜ், ராஜாமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.