திருப்பூர், டிச.3: திருப்பூர், சந்திராபுரம் பகுதியில் ஐய்யப்பன் என்பவர் வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் ராஜ்குமார் என்பவர் வாடகைக்கு குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், ராஜ்குமார் வீட்டில் சமயலறையில் வைத்திருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ராஜ்குமார் தெற்கு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.