திண்டுக்கல், ஆக. 11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.துணைச் செயலாளர் பாக்கிய செல்வராஜ் வரவேற்றார். மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி வாழ்த்துரை வழங்கினார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடகா அரசு உடனடியாக தரவேண்டும் என்று கோரியும், விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் பொன் ஆண்டவர் நன்றி கூறினார்.