பரமக்குடி, அக்.4: காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் மக்கள் பாதை பேரியக்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் பொறுப்பாளர் ராவணன் தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளர்கள் குமார், சரவணக்குமார், களாட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை குழு வழிகாட்டுதலையும் மதிக்காமல், தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் விவசாயிகளையும் கன்னட அமைப்புகளையும் தூண்டிவிடும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் விவசாய சங்கம், வைகை பாசனம், காவிரி வைகை கிருதம்மாள் குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு, தாய் தமிழர் கட்சி, தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவை, தென்தமிழர் கட்சி, நேதாஜி சுபாஷ் சேனை, ரிவல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கம், ஆம் ஆத்மி போன்ற அமைப்புகள் கலந்து கொண்டனர்.