மன்னார்குடி, ஜூலை. 4: அரசு மேல்நிலைப் பள்ளி சாரண படை மாணவர்களுக்கு கோட்டூர் காவல் நிலையலத்தில் களப்பணி பயிற்சி நடைபெற்றது.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, எடமேலையூர், எடையூர், திருத்துறைப்பூண்டி மற்றும் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த சாரணர் படைப்பிரிவு மாணவர்கள் 63 பேர் திரி சாரணர் படைத்தலைவர்கள் சங்கர், பழனிவேல், ரமேஷ், ரமேஷ் குமார் தலைமையில் கோட்டூர் காவல் நிலையத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.களப்பயணம் சென்ற சாரணர் பிரிவு மாணவர்களை கோட்டூர் இன்ஸ்பெக்டர் மோகன் வரவேற்று புகார் மனு கொடுக்கும் முறை, முதல் தகவல் அறிக்கையில் என்னென்ன விவரங்கள் இருக்கும் என்பன குறித்தும் காவல் நிலை யத்தின் ஏனைய முக்கிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.