Monday, February 26, 2024
Home » காவல்துறை வாகனங்கள் டிஐஜி நேரில் ஆய்வு திருவண்ணாமலை ஆயுதப்படை பிரிவு

காவல்துறை வாகனங்கள் டிஐஜி நேரில் ஆய்வு திருவண்ணாமலை ஆயுதப்படை பிரிவு

by Karthik Yash

திருவண்ணாமலை, டிச.29: திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில், காவல்துறை வாகனங்கள் மற்றும் தளவாட பொருட்கள் குறித்து முத்துசாமி ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை ஆயுதப்படை பிரிவில் பயன்படுத்தப்படும் காவல்துறை வாகனங்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்தும் தளவாடப்பொருட்கள் குறித்தும் டிஐஜி முத்துசாமி நேற்று ஆய்வு நடத்தினார். அதன்படி, திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று வாகனங்களின் ஆய்வு நடந்தது. அப்போது, ஆயுதப்படை பிரிவில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஒவ்வொரு வாகனங்களையும் டிஐஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு, இதுவரை எத்தனை கிலோ மீட்டர் பயணித்துள்ளது, அவசர கால பயன்பாடுக்கு உகந்ததாக விரைந்து செல்லும் நிலையில் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், குறித்த தேதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. மேலும், காவல்துறை வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும், வாகன பராமரிப்பு பதிவேடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தும் தளவாட பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ஆயுதப்படை காவலர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, எஸ்பி கார்த்திகேயன், ஆயுதப்படை பிரிவு டிஸ்பி மணிமாறன், இன்ஸ்பெக்டர் பிச்சைக்கண்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi