சத்தியமங்கலம், ஆக. 28: சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது, சில இடங்களில் நடக்கக்கூடிய குற்றங்களை மிகவும் நேர்த்தியான முறையில் நடித்துக் காட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவர்களும், மாணவிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். முன்னதாக சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும், சத்தியமங்கலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குருசாமி, போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.