தர்மபுரி, செப்.13: தர்மபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், காவல் துறையில் 2ம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 1819 காலிபணியிடங்கள், சிறைத்துறையில் 2ம் நிலை சிறைக் காவலர் 83 காலிபணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர் 674 காலி பணியிடங்கள் என, மொத்தம் 2576 காலிபணிடங்களில் 5சதவீத (129 இடங்கள்) முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அப்பணியிடங்களை நிரப்ப 01.07.2023 அன்று, 47 வயதிற்கு மேற்படாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, குறைந்த பட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.tnusrb.tn.gov.in http://www.tnusrb.tn.gov.inல் வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே, தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், விண்ணப்பித்த விவரத்தை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.