காளையார்கோவில், ஜூன் 25: காளையார் கோவிலில் மூடப்பட்ட தேசிய பஞ்சாலையை திறக்க கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஞ்சாலை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேசிய பஞ்சாலையை திறக்ககோரியும், 8 மாதம் சம்பளம் வழங்க வேண்டும், 24 மாத நிலுவை தொகை வழங்கவேண்டும், 5 ஆண்டுகள் போனஸ் தொகை வேண்டியும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணி கொடை வழங்க வேண்டும், ஆலையில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்கள் வாழ்வதாரம் கருத்தில் கொண்டு மீண்டும் பஞ்சாலையை திறந்து விட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனமுழக்கமிட்டனர். இதில், அனைத்து கட்சியினர், வர்த்தக சங்கம், வணிகர் சங்கம், ஆட்டோ சங்கம், வேன் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
காளையார்கோவிலில் பஞ்சாலை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
0
previous post