சிங்கம்புணரி, மார்ச் 11: சிங்கம்புணரி திருப்பத்தூர் சாலையில் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு யாகசாலை பூஜைகள் கடந்த சனிக் கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. நேற்று காலை நான்காவது கால யாக பூஜை செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீரை சுமந்து கோபுர கலசங்களை அடைந்தனர். அங்கு காளியம்மன், கருப்பர். விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பங்களின் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
0
previous post