மல்லசமுத்திரம், ஜூன் 26: சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை 6 மணிக்கு மூலவர் கந்த சுவாமிக்கு பல்வேறு மூலிகைகள் மற்றும் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மூலவர், உற்சவர் மற்றும் கோயில் வளாகம் முழுவதுமாக பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில் உட்பிரகாரத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார்.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் கோயிலுக்கு முன்பாக நெய் தீபம் ஏற்றியும், உப்பு மிளகு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் வையப்பமலை பாலசுப்பிரமணியர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்
செய்திருந்தனர்.
காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை
0
previous post