மல்லசமுத்திரம், ஜூன் 10: சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில், கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கும், வள்ளி தெய்வானைக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. காலை 6 மணி முதல் இரவு வரை சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு அகல் விளக்கேற்றி சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு கோயிலில் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை
0