நாமக்கல், செப்.3: ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று காலை 6 மணி முதல் மாலை வரை, மூலவருக்கு அபிசேகம் நடைபெற்றது. உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சேலம், நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் அமாவாசை வழிபாடு
previous post