சேந்தமங்கலம், ஆக. 28: சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கனபட்டியில் பழமை வாய்ந்த பலிஜாவாரு பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மூலவர் கிருஷ்ணர்க்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்து உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு கிருஷ்ண லீலை விளையாட்டுகள் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணன் -ராதை வேடமணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வான வேடிக்கை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சாமி ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
காளப்பநாயக்கன்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
previous post