காரைக்குடி, ஆக. 19: காரைக்குடி அருகே கோட்டையூரில் பிளாக் பிரண்ட்ஸ் கால்பந்து கால்பந்து கழகம் சார்பில் எழுவர் கால்பந்துப் போட்டி நடந்தது. சிவகங்கை மாவட்ட காலபந்துக் கழக தலைவர், திமுக ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் முன்னிலை வகித்தார். கோட்டையூர் பேரூராட்சி சேர்மன் கார்த்திக் சோலை வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
திமுக நகர செயலாளர் ராசு, எழுவர் கால்பந்து கூட்டமைப்பு செயலாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல்பரிசை பிளாக் பிரண்ட்ஸ் அணியும், 2ம் பரிசை மணச்சை சிசிஎப்சி அணியும் பெற்றன. 3ம் பரிச கண்டனூர் சுரேஷ் நினைவு அணியும், 4ம் பரிசை மதுரை கருப்பையா அம்பலம் நினைவு அணியும் பெற்றன.