களக்காடு, ஆக.15: சிதம்பரபுரத்தில் கால்நடை பராமரிப்பு துறை, களக்காடு கிருஷ்ணா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு முனையம் சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டது. சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் அம்பை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் ஆபிகராம் ஜாப்ரி ஞானராஜ், களக்காடு கால்நடை உதவி மருத்துவர் ஜோதி விஸ்வகாந்த், நெல்லை ஆவின் மேலாளர்கள் சுந்தரம், ஸ்டீபன், ஆவின் விரிவாக்க அலுவலர்கள் கோவிந்தராஜ், வேலாயுதம், பொன் விக்சன், களக்காடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெசல் கனகராஜ், மேற்பார்வையாளர் பேராச்சி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை மருத்துவ முகாம்
previous post