மதுரை, ஜூன் 6: ேகாடை காலங்களில் ஆடு, மாடுகள் மேய்சலின் போது ஏற்படும் நாவறட்சியை தடுப்பது குறித்து கால்நடை பராமரிப்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை காலங்களில் மேய்சலுக்கு செல்லும் ஆடு மற்றும் மாடுகளுக்கு நாவறட்சி அதிகம் ஏற்படும். மேய்சலுக்கு செல்லும் ஆடு மாடுகள் புற்கள் மேய்வதை தவிர்த்து நிழலைத் தேடி சென்று இளைப்பாறும். அப்போது அவற்றுக்கு நாவறட்சி ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் தேவைப்படும். இதற்கு தீர்வு காண கோடை காலங்களில் மூலிகை நீர் தயாரித்து கால்நடைகளுக்கு வழங்கலாம்.
குறிப்பாக தினசரி இருமுறை வழங்கும் தண்ணீரை, கூடுதலாக இருமுறை வழங்க வேண்டும். குளிர்ந்த தண்ணீர் சிறிய ரக நெல்லிக்காய் இடித்துப்போட்ட தண்ணீர், வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் என பல்வேறு விதமான மூலிகை நீர் வழங்கலாம். இதில் முக்கியமாக ஒவ்வொரு முறை தண்ணீர் கொடுக்கும் போதும், புதிய தண்ணீராக கொடுக்க ேவண்டும். இதனால் கோடை காலத்தில் நோய் தொற்று பரவாமல், ஆடு, மாடுகள் அதிக அளவில் பால் கறக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.