பூந்தமல்லி, ஜூலை 1: பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து சென்ற மாணவர்கள் அந்த வழியாக தாம்பரம் சென்ற தடம் எண் 66 என்ற மாநகர பேருந்தில் ஏறினர். பேருந்தின் முன்பகுதி படிக்கட்டில் தொங்கியபடியும், கால்களை தரையில் தேய்த்து கொண்டும் வீரசாகசங்கள் செய்தபடி ஆபத்தான முறையில் அட்ராசிட்டி செய்தனர். இதைக் கண்ட பயணிகளும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் பேருந்தை நிறுத்தி மாணவர்களை கண்டித்து அனுப்பினர். அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மாணவர்கள் அதேபோல் தரையில் கால்களை தேய்த்தவாறு சென்றனர். மாணவர்களின் இந்த அட்ராசிட்டியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கால்களை தரையில் தேய்த்தபடி பஸ்சில் மாணவர்கள் அட்ராசிட்டி: வீடியோ வைரல்
0