ஒட்டன்சத்திரம், செப். 9: காளஞ்சிபட்டியில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் காலை உணவு திட்டம் ஆய்வு செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, அவைத்தலைவர் செல்வராஜ், பழனிச்சாமி கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.