ஈரோடு, ஜூன் 25: ஈரோடு மாநாகராட்சிக்குட்பட்ட ஜவுளிநகர் நடுநிலைப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் குறித்து, துணை ஆணையர் தனலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். முதல்வரின் காலை உணவு திட்டம் மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,079 பள்ளிகளை சேர்ந்த, 51 ஆயிரத்து, 751 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில், 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜவுளிநகரில் உள்ள மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில், காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, துணை ஆணையர் தனலட்சுமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை அவர் சாப்பிட்டு பார்த்தார். ஆய்வின் போது, சுகாதார ஆய்வாளர் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.