திருவாரூர், ஜுன்: 26 மாநிலம் முழுவதும் இருந்து வரும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும், பணி சுமையினை குறைத்திட வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தர ஊதியம் வழங்கவேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமத்தினை 25 சதவிகிதமாக உயர்த்தவேண்டும், அனைத்து நிலைகளிலும் அவுட் சோர்சிங், தற்காலிக மற்றும் தொகுப்பு ஊதிய நியமனங்களை முழுமையாக கைவிடவேண்டும்.
பசலி ஆண்டின் தொடக்கமான ஜூலை 1ந் தேதியினை வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதன் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.