திருவாரூர், மார்ச் 5: காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், மேற்பார்வையாளர் பணிக்கான பதவி உயர்வினை உடனடியாக வழங்கவேண்டும். கோடை விடுமுறையை ஒரு மாத காலம் வழங்கவேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தவமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரேமா மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹனிபா, மாவட்ட பொருளாளர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.