திருவாரூர், பிப். 15: காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கிகளில் இருந்து வரும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக மாற்றவேண்டும், அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
திருவாரூரில் நேற்று வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் பணகல் சாலையில் இயங்கி வரும் தேசிய வங்கி கிளை ஒன்றின் முன்பாக கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் ராஜவேல், அழகிரி, தர்மதாஸ், அழகிரிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.