மதுரை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பாபா அணு ஆராய்ச்சி மையம், அணு மறுசுழற்சி ஆணையத்தில், பிரிவு-1, பிரிவு-11 பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் தாராப்பூர், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி கழகங்களில் இருப்பவை எனவும், பணிநியமன எழுத்துத்தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்க வேண்டும். சிஆர்பிஎப் நடத்துகிற துணை மருத்துவப்பதவிகளுக்கான தேர்வு மையங்கள் 9ல் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். தற்போது வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது’’ என கூறியுள்ளார்….