விருதுநகர், ஜூன் 18: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6 வருடங்களாக புதிய செல்போன் வழங்காத 22 மாவட்டங்களுக்கு புதிய செல்போன்கள் வழங்க வேண்டும். நெட்வொர்க்கிற்கு ஏற்ற சிம் கார்டு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணி தவிர்த்து பிறதுறை பணிகளை செய்ய நிர்பந்தம் செய்ய கூடாது. மாவட்ட நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் பாண்டியம்மாள், சாராள், இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
0
previous post