கோவை, மே 27: தி ரேடியோலோஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் (டிஆர்ஏஏ) மாநில பொதுக்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாநில தலைவர் ஞானத்தம்பி தலைமை வகித்தார். இதில், மாவட்ட வாரியாக உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக காலி பணியிடங்களை நிரப்புவது, புதிய பணியிடங்களை உருவாக்குவது, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து, மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில், மாநிலத்தலைவராக பாலசுப்பிரமணியன், பொதுசெயாலாளர் கோதண்டன், மாநில பொருளாளராக ராஜ்கமல், கோவை மாவட்ட தலைவர் முகமது சபீர், மாவட்ட செயலாளர் ராஜாசிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.