விருதுநகர், மார்ச் 5: விருதுநகரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 1993 மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வினை வழங்க வேண்டும்.
மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் இல்லையென்றால் சமூக நலத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமற்ற வழிமுறையான கர்ப்பிணிகளுக்கு முகப்பாவனை பதிவு செய்து டிஹெச்ஆர் வழங்க வேண்டுமென்ற முறையை கைவிட்டு வழக்கம் போல் செயல்படுத்த வேண்டும்.
மே மாத விடுமுறையை 1 மாதமாக்கி வழங்க வேண்டுமென்ற கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவடட்ட செயலாளர் தேவா, மாநில செயற்குழு உறுப்பினர் சத்யா சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் பூங்கொடி, பாண்டியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.