தர்மபுரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் காலிபிளவர் பயிரிட்டுள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட காலிபிளவர் லாரிகள் மூலம், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரி நகரில் நேற்று வேன் மூலம் காலிபிளவர் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ காலிபிளவர் ரூ.40க்கு விற்பனையானது.
இது குறித்து வியாபாரி கூறுகையில், ‘ஆனி மாதம் பிறந்ததையடுத்து திருமண சீசன் முடிந்தது.
இதனால் காய்கறி தேவை குறைந்துள்ளது. இதனால், காலிபிளவரும் விலை குறைந்து, ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை செய்கிறோம்,’ என்றார்.