மணிகண்டம், பிப்.21: திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள தீரன் மாநகரில் எழுந்தருளி உள்ள காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நாளில் கால பைரவரை வழிபட்டால் அஷ்ட லட்சுமிகளும், நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் நமக்கு கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை அதன் அடிப்படையில் பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால் காலபைரவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. விழாவில் ஆலம்பட்டி புதூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தீரன் மாநகர் விழா குழுவினர் செய்திருந்தனர்.
காலபைரவர் கோயிலில் சிறப்பு அபிஷேகங்களுடன் தேய்பிறை அஷ்டமி விழா
0