நெல்லை, நவ.9: மானூர் அருகே 12 பனை மரங்களை வெட்டி சாய்த்ததாக தனியார் காற்றாலை நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ெநல்லை மாவட்டம், மானூர் அருகே வாகைக்குளம் கிராமத்தில் பனைமரங்கள் அதிகமாக உள்ளன. கடந்த 7ம்தேதி இங்குள்ள 10 பெரிய பனை மரங்களும், 2 சிறிய பனை மரங்களும் ஜேசிபி உதவியுடன் வேருடன் அகற்றப்பட்டுள்ளன. தகவலறிந்த வாகைகுளம் விஏஓ மாரியப்பன் மானூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அங்குள்ள தனியார் காற்றாலை நிறுவனம் அந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்நிறுவனம் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.