சேலம், ஜூன்11: சேலம் கந்தம்பட்டியில் தனியார் மோட்டார் கம்பெனியின் கார் ஷோரூம் உள்ளது. இதன் மேலாளராக சேலம் மாமாங்கம் கீழக்காடு பகுதியை சேர்ந்த தர் (34) உள்ளார். இவர் கடந்த 7ம் தேதி இரவு, ஷோரூமை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அதற்கு அடுத்தநாளான நேற்று முன்தினம் காலை ஷோரூமை திறந்தார். அப்போது, ஷோரூமின் பக்கவாட்டு சுவரில் துளை போடப்பட்டிருந்தது. அந்த துளையின் வழியே மர்மநபர்கள் உள்ளே புகுந்து, கேஷியரின் பெட்டியில் இருந்த ரூ.400ஐ திருடிச் சென்றிருந்தனர். பெரிய அளவில் தொகை இருக்கும் என உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்குமிங்கும் சுற்றி பார்த்துவிட்டு, எதுவும் கிடைக்காமல் 400 ரூபாயை எடுத்துக்கொண்டு, அதே துளை வழியே தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி சூரமங்கலம் போலீசில் தர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் ஷோரூம் சுவரில் துளை போட்டு திருட்டு
0