பாப்பிரெட்டிப்பட்டி, நவ.29: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் (60). இவர் நேற்று முன்தினம், இருளப்பட்டி உரக்கடைக்கு சென்று விட்டு, டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார், டூவீலரின் பின்பகுதியில் மோதியது. இதில் நிலை தடுமாறி வெங்கடாசலம் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஏ.பள்ளிப்பட்டி போலீசார், காரை ஓட்டி வந்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்த திருமுருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் மோதி விவசாயி படுகாயம் டிரைவர் மீது வழக்கு பதிவு
0
previous post