நல்லம்பள்ளி, ஜூலை 6: நல்லம்பள்ளி அருகே, கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பிளாஸ்டிக் பைப் ஏற்றிய லாரி ஒன்று, கும்பகோணத்தை நோக்கி, நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சி மாவட்டம், விராலிமலையை சேர்ந்த பரமசிவம் (28) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சேலம்-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பைப்புகள் ரோட்டில் உருண்டோடியது. விபத்து குறித்து தகவலறிந்த தொப்பூர் போலீசார், காயமடைந்த டிரைவர் பரமசிவத்தை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த 2பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தொப்பூர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் மீது மோதி கவிழ்ந்த லாரி
0
previous post