மதுரையில் நேற்று இரவு 11.30 மணியளவில் தல்லாகுளம் பகுதியில் இருந்து கார் ஒன்று வைகை ஆற்றை கடப்பதற்காக கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தில் ஏறியது. அதிவேகமாக வந்ததால திடீரென நிலைதடுமாறிய கார் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது. இதன் தொடர்ச்சியாக காரில் தீடீரென தீப்பற்றியது.
இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த டிரைவர் கதவைத்திறந்து வெளியில் குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து கார் திகுதிகுவென எரியத்தொடங்கியது. தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தினர் அங்கு விரைந்து வந்து, காரில் பற்றிய தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.