வந்தவாசி, ஜூன் 17: வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் புருஷோத்தமன்(25) கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பாதிரி ஏரிக்கரை பகுதியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்குள்ள நெற்களம் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சுதர்சன்பாலாஜி(20) (தனியார் கார் கம்பெனி ஊழியர்), குமார் மகன் சிவபார்சுவநாதன்(21) தனியார் பைக் கம்பெனி ஊழியர். இருவரும் அங்கு மது அருந்தி சத்தம் எழுப்பியவாறு இருந்தார்களாம். அப்போது புருஷோத்தமன் ஏன் சத்தம் போடுகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளாராம். அப்போது ஆத்திரம் அடைந்த இருவரும் அருகில் இருந்த பீர் பாட்டிலால் புருஷோத்தமன் தலை மீது தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து புருஷோத்தமன் நேற்று வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 தனியார் கம்பெனி ஊழியர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
கார் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்குதல் 2 பேருக்கு போலீஸ் வலை வந்தவாசி அருகே
0