திருவாடானை, மே 29: ஏர்வாடியில் இருந்து தேவகோட்டை செல்வதற்காக திருவாடானை அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், பெரியகீரமங்கலம் பகுதியில் ஒரு கார் வந்தது. அப்போது அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் அந்த காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஷா(51) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த டிரைவரான தேவகோட்டையைச் சேர்ந்த சிங்காரம் மகன் பாலமுருகன்(43) என்பவர் படுகாயமடைந்து காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் மீட்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருவாடானை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.