கோவை, ஏப்.18: கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று (18ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று, அடிப்படை வசதி, குடிநீர் பிரச்னை, பாதாள சாக்கடை, மின் விளக்கு, தொழில் வரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், சுகாதாரம், கல்வி தொடர்பான பிரச்னைகள் குறித்து புகார் தரலாம் என கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.