தா.பழூர், ஜன. 13: காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி களப்பணம் மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்லூரி களப்பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மேற்பார்வையாளர் சுதா மற்றும் ஆசிரியர் உறுப்பினர்கள் மோகன், சம்பத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் மூலம் 70 மாணவர்கள் அரியலூர் அரசு கல்லூரிக்கும் 105 மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவம் மற்றும் துணை மருத்துவர் சார்ந்த படிப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா, வட்டார ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தாஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.