செய்முறை:* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.* தாளித்தவற்றுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிய பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.* அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும்.* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும், இப்போது சுவயான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.
காரைக்குடி நண்டு மசாலா
previous post