காரைக்குடி, ஜூலை 18: காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான ரோடு சைக்கிள் போட்டிகள் நடந்தது. மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் செயலாளர் ஏகே.நாகராஜ் வரவேற்றார். மாவட்ட தலைவர் சோமேஸ் தலைமை வகித்தார். மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சேர்மன் சுப.துரைராஜ், ஆலோசகர் ஜெகதீஸ் முன்னிலை வகித்தனர். போட்டிகளை முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், எம்எல்ஏ மாங்குடி, நகராட்சி சேர்மன் முத்துத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.
14,16,18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் ஹரிதாஸ் துரைராஜ், கவுரவ செயலாளர் மருதப்பன், நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.